நெகிழ்ச்சி!! இனி நானும் ஒரு தமிழ் பெண்!! தஞ்சாவூர்காரரை கரம் பிடித்த ரஷ்யப் பெண்!!!

 
அல்பினா

இந்தியாவில் மேற்கத்திய கலாச்சாரம் பெருகி வருகிறது. அந்த கலாச்சாரப்படி பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், வாழ்க்கை முறை  என ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டு வருகிறோம். ஆனால் அங்கிருப்பவர்கள் இன்னும் தமிழக கலாச்சாரம் , இந்திய பாரம்பரியத்தினை தான் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர். இது போல் வாழவும், கலாச்சாரங்களை பின்பற்றவும் ஆவலாக இருந்து வருகின்றனர். அதனாலேயே சுற்றுலா என்ற பெயரில் அடிக்கடி நம் ஊரை சுற்றிப்பார்க்க வருகின்றனர் என்றால் மிகையாகாது. அதில் பல பேர் நம்ம ஊர் கலாச்சாரம் பிடித்து போய் இங்கேயே தங்கியும் விடுகின்றனர். இன்னும் சிலர் இங்கிருப்பவர்களை திருமணம் செய்து கொண்டு இங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். இதே போல் சம்பவங்கள் சமீபமாக அதிகரித்து வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகே உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(33). யோகா ஆசிரியரான இவர் கடந்த 10 ஆண்டுகளாக ரஷ்யாவில் யோகா ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.பிரபாகரனிடம் யோகா கற்பதற்காக அந்த நாட்டை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அல்பினா (31) என்பவர் வந்துள்ளார். யோகா கற்க வந்த இடத்தில் அல்பினாலுக்கும், பிரபாகரனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து திருமணம் செய்தக்கொள்ள காதலர்கள் முடிவு செய்தனர். இதற்காக அல்பினா காதலையும் தனது காதலனையும் வீட்டில் கூறியுள்ளார்.

அல்பினா

அவர்கள் காதலுக்கு ஓகே சொன்னதால்.. அடுத்ததாக பிரபாகரனும் புலவஞ்சியில் உள்ள பெற்றோரிடம் சம்மதம் வாங்கியுள்ளார். இந்நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் ரஷ்ய பெண்ணை கரம் பிடித்துள்ளார். பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூரில் இவர்கள் இருவருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. தமிழில் வேதமந்திரங்கள் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வாழ்த்தினர்.

இது குறித்து பிரபாகரன் கூறுகையில், நான் யோகா டீச்சர் ஆக ரஷ்யாவில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய யோகா மாணவியாக அல்பினால் இருந்த நிலையில் எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனை அடுத்து எங்களது பெற்றோர்களிடம் சம்மதம் பெற்று அவர்கள் முன்னிலையே எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது என்றார்.

அல்பினா

அல்பினா பேசுகையில், ரஷ்யா கலாச்சாரத்தை விட தமிழ் கலாச்சாரமும், இங்குள்ள  மக்கள் மற்றும் இவர்களது வாழ்க்கை முறை, இயற்கை சார்ந்த அமைப்புகளும் எனக்கு அதிகம் பிடித்துள்ளது. தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். கூடிய விரைவில் இங்குள்ள மக்களிடம் சகஜமாக தமிழ் பேசி நானும் ஒரு தமிழ் பெண்ணாக ஆகிவிடுவேன் என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

 

From around the web