பட்டைய கிளப்பும் ஜிகர்தண்டா 2 !! தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தீபாவளி ரிலீஸ்!!

 
ஜிகர்தண்டா

2014ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மதுரையை களமாக கொண்டு  எடுக்கப்பட்ட படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன்,  பாபி சிம்ஹா என நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். இந்த படத்துக்காக 2014ல்   பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றார்.  தற்போது  8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகம்  உருவாகி வருகிறது. 

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா படத்தின் சண்டை காட்சி ஒன்று கொடைக்கானலில் திலீப் சுப்பராயன் தலைமையில் 80 சண்டை கலைஞர்களுடன் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.  ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி  என 3 மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 
 

ஜிகர்தண்டா பாகம் ஒன்று திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஜிகர்தண்டா பாகம் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. ஜிகர்தண்டா 2வில் இயக்குநர் எஸ்ஜேசூர்யா மற்றும் லாரன்ஸ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான இசை சந்தோஷ் நாராயணன். இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

ஜிகர்தண்டா

இப்படத்திற்கான ஒளிப்பதிவு  திருநாவுக்கரசு. இந்நிலையில், படத்தின் புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை  வெளியாகும் என ஏற்கனவே  படக்குழு நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன் படி ஜிகர்தண்டா 2 திரைப்படம் நவம்பர் 12ம் தேதி தீபாவளி தினத்தில்  திரையரங்குகளில் வெளியாகும் என சின்ன டீஸருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்படலாம் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web