'பௌஷ் பூர்ணிமா': கங்கையில் ஒரே நாளில் 24 லட்சம் பேர் புனித நீராடல்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
கங்கை அமாவாசை கடல் புனித நீராடல்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் அந்தர்வாகினியான சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 'மாக் மேளா - 2026' (Magh Mela 2026) நேற்று ஜனவரி 3, 2026  பௌர்ணமி தினத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.

முதல் நாள் புனித நீராடல் குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவல்களின் படி, உத்தரப்பிரதேசத்தில் மாக் மேளா திருவிழா நேற்று 'பௌஷ் பூர்ணிமா' (Paush Purnima) தினத்தில் தொடங்கியது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடித் தங்களது வழிபாடுகளைத் தொடங்கினர். நேற்று மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் பல்வேறு புனிதத் தலங்களில் மொத்தம் 24 லட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

கும்பமேளா காசி புனித நீராடி பெண்கள் தரிசனம் குளம் கடல் அமாவாசை சூரிய வணக்கம் நமஸ்காரம் கங்கை

கங்கை ஆற்றின் பல்வேறு படித்துறைகளில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் நீராடினர். சரயு நதிக்கரையில் சுமார் 5.5 லட்சம் பக்தர்கள் வழிபட்டனர். யமுனை நதியில் சுமார் 2.5 லட்சம் பேர் புனித நீராடினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கமித்து 'மாக் மேளா'வின் முதல் நாளைச் சிறப்பித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த மாக் மேளா, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளாவாகவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்ப மேளாவாகவும் கொண்டாடப்படும். 2025-ல் மகா கும்பமேளா பிரம்மாண்டமாக முடிந்த நிலையில், இந்த ஆண்டு 2026-ல் 'மாக் மேளா' அதே உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

கங்கை

முக்கிய நீராடல் தினங்களில் அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் வரும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக 'வி.ஐ.பி. மரியாதை'களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 1,500-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கேமராக்கள், டிரோன்கள் மற்றும் ஏ.ஐ. (AI) தொழில்நுட்பம் மூலம் கூட்ட நெரிசல் கண்காணிக்கப்படுகிறது. சுமார் 20 முதல் 25 லட்சம் 'கல்பவாசி'கள் (ஒரு மாதம் ஆற்றுப்படுகையில் தங்கி விரதமிருப்பவர்கள்) இந்த விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாக் மேளா வரும் பிப்ரவரி 15-ம் தேதி மகா சிவராத்திரியுடன் நிறைவடைகிறது. இதில் ஜனவரி 14 (மகர சங்கராந்தி) மற்றும் ஜனவரி 18 (மௌனி அமாவாசை) ஆகிய தினங்களில் மிக அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!