பவன் கல்யாண் மனைவி திருப்பதி கோவிலில் முடி காணிக்கை..!

ஆந்திர மாநிலத்தில் துணை முதல்வராக இருந்து வருபவர் பவன் கல்யாண். இவரது மகன் சிங்கப்பூர் பள்ளியில் படித்து வந்த நிலையில் சமீபத்தில் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து உடனடியாக பவன் கல்யாண் சிங்கப்பூருக்கு நேரில் சென்று மகனை இந்தியாவுக்கு அழைத்து வந்தார் .
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பவன் கல்யாண் மற்றும் அன்ன லெஸ்னேவாவின் மகன் மார்க் சங்கர் பத்திரமாக மீட்கப்பட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பவன் கல்யாண் உடனடியாக சிங்கப்பூர் சென்று தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வந்தார். இதையடுத்து, பாலாஜியின் அருளால் ஒரு புனித யாத்திரை செல்ல திட்டமிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை அன்ன லெஸ்னேவா கோவிலுக்கு வந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) விதிகளின்படி காயத்ரி சதனில் உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார். முதலில் ஸ்ரீ வராக சுவாமி கோவிலில் தரிசனம் செய்து தீர்த்த பிரசாதம் பெற்று கொண்டார். அதன் பிறகு, புனித பத்மாவதி கல்யாண கட்டாவில் தலை முடியை காணிக்கையாக கொடுத்து தனது விரதத்தை பூர்த்தி செய்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது மகன் மார்க் சங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதை அடுத்து இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!