பனியில் உறைந்த மயில்… சுத்தியால் உடைத்து உயிரை காப்பாற்றிய தருணம்... நெகிழ்ச்சி வீடியோ!
அமெரிக்காவில் நிலவும் கடும் பனிக்குளிர் மனிதர்களையும் விலங்குகளையும் கடுமையாக பாதித்து வருகிறது. மினசோட்டா மாகாணத்தில் ஏற்பட்ட மைனஸ் டிகிரி வெப்பநிலையால் ஒரு மயில் முழுவதுமாக பனியில் உறைந்து நின்றது. தோகையும் உடலும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டதால் அது அசைய முடியாமல் உயிரற்ற சிலை போல காட்சியளித்தது.
அந்த நேரத்தில் அங்கு வந்த ஒருவர் சுத்தியலை கொண்டு மயிலின் தோகையில் உறைந்திருந்த பனியை மெதுவாக உடைத்தார். மிகுந்த கவனத்துடன் பனியை அகற்றியதால் மயில் சிறிது சிறிதாக அசைவதற்குத் தொடங்கியது. சில நிமிடங்களில் அது இயல்பு நிலைக்கு திரும்பியது.
பனியில் இருந்து விடுபட்டதும் மயில் தனது அழகிய தோகையை விரித்து மகிழ்ச்சியாக ஆடியது. உயிர் காக்கப்பட்ட அந்த தருணம் பலரின் கண்களை கலங்க வைத்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருப்பதை இது உணர்த்துவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
