வளநாட்டில் மயில்கள் வேட்டை... 5 பேர் அதிரடி கைது!
வளநாடு பகுதியில் மயில்களை வேட்டையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி, கார்த்தி, திருப்பதி, பரத்குமார், கருப்பையா ஆகியோர் மயில்களை வேட்டையாடியதாக பிடிபட்டனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றும், 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மயில்கள் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை வேட்டையாடுவது கடும் குற்றமாகும். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
