பட்டப்பகலில் பயங்கரம்!! இளைஞர் கல்லால் அடித்து கொலை!!

 
பத்மா

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் இந்தரம் கிராமத்தில் கனகய்யா- பத்மா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளும், அதே ஊரை சேர்ந்த மகேஷ் (24) என்ற இளைஞரும் காதலித்துள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்த போது மிக நெருக்கமாகவும், உல்லாசமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. நெருக்கமாக  இருந்தபோது அதனை வீடியோ எடுதது மகேஷ் வைத்துள்ளார். 

இந்நிலையில், மகேஷ் - அவரது காதலியான இளம்பெண் இருவரும் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.  ஆனால், தன்னை தொடர்ந்து காதலிக்கும்படி மகேஷ் விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது. 

பத்மா

இதனால் கோபமடைந்த மகேஷ், காதலிக்கும்போது நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோவை காண்பித்து தொல்லை கொடுத்துள்ளார். கணவரிடம் காட்டிவிடுவேன் என கூறி பாலியல் தொல்லை அளித்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் முன்னாள் காதலியான இளம்பெண்ணின் கணவனுக்கு அந்த நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

இதனால், மனவேதனை அடைந்த கணவர், 6 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வளவு நடந்த பிறகும் விடாமல்  மகேஷ் தனது முன்னாள் காதலிக்கு தொல்லை கொடுத்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பயனில்லை. 

பத்மா

இந்நிலையில் நேற்று மகேஷ், இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணின் வீட்டு முன்பு வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் குடும்பத்தினர், அவரை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர்  அங்கிருந்த கல்லை தூக்கி தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web