ரயில் பயணங்களில் இதையெல்லாம் செய்தால் அபராதம்! புதிய விதிமுறைகளை அறிவித்தது ரயில்வே துறை!

 
ரயில்

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு ரயில் பயணத்தில் பல விதிகளை ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் சில திருத்தங்களை சமீபத்தில் செய்துள்ளது ரெயில்வே துறை.

இரவு 11 மணி முதல், அதிகாலை 5 மணி வரை ரயில் பெட்டியில் இருக்கும் செல்போன் சார்ஜர் பாயின்ட்டில் சார்ஜ் போடக் கூடாது. அதே போல் எளிதில் தீப்பற்றும் பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல விதி முறைகள் நடைமுறையில் இருக்கின்றன என்றாலும் யாரும் அதனை மதிப்பதில்லை. இந்நிலையில், ரயிலில் இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகள் சுகமாக துாங்கும் வகையில் புதிய விதிமுறைகளை ரயில்வே போர்டு சமீபத்தில் வெளியிட்டது.

ரயில்  நடைமேடை  கட்டணம்  உயர்வு

இரவு 10 மணிக்கு மேல் எந்த பயணியும் அவர் இருக்கையிலோ, ரயில் பெட்டியிலோ செல்போனில் சத்தமாக பேசக் கூடாது. ஹெட்போன் இல்லாமல் சத்தமாக பாட்டு கேட்கக் கூடாது.

குரூப்பாக பயணம் செய்பவர்கள் இரவு 10 மணிக்கு மேல் அவர்களுடன் வந்த பயணிகளுடன் பேசுவதோ அரட்டை அடிப்பதோ கூடாது.

இரவு 10 மணிக்கு மேல் இரவு விளக்கு தவிர பெட்டியில் இருக்கும் எல்லா விளக்குகளும் அணைக்கப்படும்.

கீழ்படுக்கையில் இருக்கும் பயணி, எக்காரணம் கொண்டும். இரவு 10 மணிக்கு மேல், நடுப்படுக்கையில் இருக்கும் பயணி, அவரது படுக்கையை விரிப்பை விரிக்க எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.

ரயில்

ரயில் பெட்டியில் இரவு 10 மணிக்கு முன்பாக சாப்பிட்டு விட வேண்டும். டிடிஇ(டிக்கெட் பரிசோதகர்) இரவு 10 மணிக்கு மேல் பயணியின் டிக்கெட்டை கேட்டு பரிசோதிக்கக் கூடாது.

கேன்டீன் ஊழியர்கள் உட்பட ரயில்வே பணியாளர்கள் ரயில் பெட்டியில் இரவு 10 மணிக்கு மேல் பயணிகளுக்கு தொல்லை தரும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது.
என புதிய கோட்பாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web