"தமிழர்களின் இதயத்தில் வாழும் பென்னிகுவிக்!" - முதல்வர் புகழஞ்சலி... இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்த பென்னிகுவிக் குடும்பத்தினர்!

 
ஸ்டாலின் முதல்வர்

தென் மாவட்டங்களின் "விவசாயத்தின் தந்தை" எனப் போற்றப்படும் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185-வது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்குத் தனது எக்ஸ் தளம் வாயிலாகப் புகழ்வணக்கம் செலுத்தியுள்ளார்.

முதலமைச்சர் தனது பதிவில் திருக்குறளை மேற்கோள் காட்டி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.  "செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது" என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் பென்னிகுவிக். தென் தமிழக மக்களின் பசி மற்றும் பஞ்சத்தைப் போக்கத் தனது சொந்தச் சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பெருமகனார் அவர்.


கடந்த ஆண்டு லண்டன் பயணத்தின் போது பென்னிகுவிக்கின் குடும்பத்தினரைத் தான் சந்தித்ததை நினைவு கூர்ந்த முதலமைச்சர், இந்த ஆண்டு அவர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளதைக் கேட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பென்னிகுவிக் பிரிட்டிஷ் அரசாங்கம் நிதி வழங்க மறுத்தபோது, இங்கிலாந்தில் இருந்த தனது குடும்பச் சொத்துக்களை விற்று அந்தப் பணத்தில் அணையைக் கட்டி முடித்தார். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் இன்றும் இந்த அணையே ஆதாரமாக உள்ளது. இன்றும் தென் தமிழகத்தில் உள்ள பல குடும்பங்களில் தங்களது குழந்தைகளுக்கு 'பென்னிகுவிக்' எனப் பெயரிட்டு அவரை நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!