இனி 40 வயசிலேயே பென்ஷன்... எல்.ஐ.சி.யின் அசத்தலான திட்டம்!

 
பென்ஷன்

இந்தியாவின்  மிக பெரிய அரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில்  ஒன்று லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா. இந்நிறுவனம் வயதுக்கேற்றாற் போல் பல்வேறு வகையான பாலிசிகளை வழங்கி வருகிறது.  60 வயதிற்கு பிறகு பென்ஷன் வழங்கும் வகையிலான பல LIC பிளான்கள் தற்போது நடைமுறையில்  உள்ளன. பொதுவாக பென்ஷன் பிளான்களை பொறுத்தவரை 60வயதுக்கு பின் தான் பென்ஷன் வழங்கும் படி  வாய்ப்புக்கள் இருக்கும் . ஆனால் எல்.ஐ.சியின் சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தில்   40 வயதில் இருந்தே பென்ஷன் பெறுவதற்கான பிரத்யேக வாய்ப்பை அறிவித்துள்ளது. 

பென்ஷன்

LIC-யின் சாரல் பென்ஷன் பிளான் உடனடி annuity பிளான் ஆகும். இந்த பாலிசி எடுத்தவுடனே   பென்ஷன் கிடைக்க ஆரம்பித்து விடும்.  இத்திட்டத்தின் கீழ் பாலிசியை வாங்கும் போது, நீங்கள் ஒரு முறை மட்டுமே பிரீமியத்தை செலுத்தினாலே போதும்    பாலிசிதாரர் பிரீமியம் செலுத்திய பின்னரே பென்ஷன் தொகையை பெறத் தகுதியானவர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 60 வயதிற்கு பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்றால் பென்ஷனையே பலரும் நம்பியுள்ளனர். வயதான காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானம் தரக்கூடிய பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் இருந்தாலும்  60 வயதிற்கு மேற்பட்ட பென்ஷன்தாரர்களுக்கு பல வகையான திட்டங்களை எல்ஐசி அறிவித்துள்ளது.  இதில், சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம்  40 வயது முதல் சேமித்து ஓய்வு காலத்தில் பயன் பெறும் வகையில் அருமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

எல்.ஐ.சி. பென்ஷன்


அதாவது, இத்திட்டத்தில்  பாலிசிதாரர் ஒருமுறை மட்டும் பிரீமியம் தொகையை செலுத்தினாலே போதும். இந்த பிரீமியம் தொகையை செலுத்திய பிறகு ஒவ்வொரு மாதமும் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ 1000 முதல் பெற்றுக்கொள்ளலாம் அத்துடன், மாதாந்திர அடிப்படையில் காலாண்டு, அரையாண்டு மற்றும்  வருடத்திற்கு ஒரு முறை என விருப்பத்தின் பேரில் பென்ஷன் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில்   பாலிசிதாரர் பாதியிலேயே உயிரிழந்து விட்டால்  டெபாசிட் செய்த தொகை நாமினிக்கு திரும்ப வழங்கப்படும்.  கணக்குத் தொடங்கிய பாதியிலேயே டெபாசிட் செய்த பணத்தை பென்ஷன்தாரர் பெற விரும்பினால்  6 மாதத்திற்கு பிறகு டெபாசிட் செய்த தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web