40+ வயதுடையவர்களுக்கு ஆட்டோமேஷன் திறன்களில்லை... வேலையிழப்பு குறித்து பிரபல கார்ப்பரேட் நிறுவனர் விளக்கம்!

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் சமீபகாலமாக ஊழியர்கள் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இது குறித்து பாம்பே ஷேவிங் கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு தேஷ் பாண்டே “ 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்கிற ஆபத்துக்கள் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி நிறுவனங்கள் செலவு குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது முதலில் பாதிக்கப்படுவது 40 வயதுக்கும் மேற்பட்ட அதிக சம்பளம் பெறுபவர்களே. மேலும் 40 வயதில் அவர்களுக்கு குடும்ப நிதி சுமை, குழந்தைகளின் கல்வி, பெற்றோர்களை கவனித்தல், EMI போன்ற பல்வேறு பொருளாதார தேவைகள் இருப்பதாலும் அவர்களுடைய சேமிப்பை மிகக் குறைவாகவே வைத்திருப்பர்.
இதனால் அவர்களுக்கு இது மாதிரியான சூழ்நிலை நிதி மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் தொழிலாளர்கள் தங்களை வேலையில் நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள AI குளோனிங் மற்றும் ஆட்டோமேஷன் என புதிய தொழில்நுட்பங்களில் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் அதிக சேமிப்பையும் பராமரிக்க வேண்டும் என தேஷ் பாண்டே கூறியுள்ளார். இவரது பதிவிற்கு இணையவாசி ஒருவர் கூறும் பதிலில், 40-40 பிரச்சனை தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகரித்து வருகிறது. 40 வயதுக்கு மேல் மற்றும் 40 லட்சம் சம்பளம் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது.
இந்நிலையில் இருப்பவர்கள் ஜூனியர் வேலைகளுக்கு அதிக தகுதி உடையவர்களாகவும், நடுத்தர நிலை பதவிகளுக்கு மிக அதிக சம்பளம் வாங்குபவர்களாகவும் கருதப்படுகின்றனர். இந்த வயதினர் இடையே AI, ஆட்டோமேஷன் போன்ற புதிய திறன்கள் இல்லாத காரணத்தினால் இது போன்ற பணி இழப்பு சூழல் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!