மக்கள் நிம்மதி... பிராட்வே பேருந்து நிலைய மாற்றம் திடீர் ரத்து - MTC அறிவிப்பு!

 
பிராட்வே பேருந்து நிலையம்

பிராட்வே பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகளுக்காக, அங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் நாளை (ஜனவரி 7) முதல் மாற்றப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிர்வாக காரணங்களால் இந்த இடமாற்றம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தனது ‘எக்ஸ்’ (X) வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் 07.01.2026 முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலை: நிர்வாக காரணங்களால் இந்த இடமாற்ற நடவடிக்கை தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்படுகிறது.


மறு அறிவிப்பு வரும் வரை பிராட்வே பேருந்து நிலையம் தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து செயல்படும். மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். திடீரென பேருந்து நிலையத்தை மாற்றினால் அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படும் எனக் கருதப்பட்ட நிலையில், இந்தத் தற்காலிகத் தள்ளிவைப்பு பயணிகளுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.

சென்னை பிராட்வே பேருந்து

சுமார் 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லும் இந்தப் பேருந்து நிலையத்தை, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் போது மட்டுமே தற்காலிக இடமாற்றம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!