பொதுமக்கள் கடும் அவதி!! இன்று முழு அடைப்பு போராட்டம்!!

 
கடையடைப்பு

நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சி, தொழிற்சாலைகள் என பல்வேறு காரணங்களால் விவசாய நிலங்கள் பெருமளவு அழிந்து வருகின்றன அந்த வகையில் கடலூரில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. நிறுவனத்தை விரிவாக்கும் பொருட்டு கடந்த சில வருடங்களுக்கு முன் நிலம் கையகப்படுத்தப்பட்டன. அவற்றை சீர்செய்யும் முயற்சியில் என்.எல்.சி தற்போது இறங்கியுள்ளது. இதற்கு சுற்று வட்டார கிராமப்புற மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு நாள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதன்படி இன்று ஒரு நாள் கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி சுரங்க பணிகளுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டம் முழுவதும் மார்ச் 11 ம் தேதி சனிக்கிழமை  என்.எல்.சிக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடையடைப்பு

இந்நிலையில் வணிக நிறுவனங்கள் மற்றும் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணியில் முதற்கட்டமாக 2006ல்  பெறப்பட்ட நிலத்தை சமன்படுத்தும் பணிகளை தற்போது என்.எல்.சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து  அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடாமல் தடுக்க பாதுகாப்பிற்காக அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் நிலம் கையப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்று  மார்ச் 11ம் தேதி சனிக்கிழமை  கடலூரில் பாமக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

என்எல்சி

இந்த போராட்டத்திற்கு அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  மாவட்ட நிர்வாகம் முழு அடைப்பு போராட்டம் குறித்து பாமகவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. உரிய பாதுகாப்புடன் வணிக நிறுவனங்கள், பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்த இடையூறும் நிகழாது என பாமக உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web