ரொம்ப உஷாரா இருங்க... புது வைரஸ் கொரோனா போல பரவும்! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!!

 
ஐசிஎம்ஆர்

இந்தியா முழுவதும்  கடந்த சில வாரங்களாக வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இது குறித்து ஐசிஎம்ஆர் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பல பகுதிகளில் படிப்படியாக  இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.   முன்னாள் ஏய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் என்பது எச்1என்1 வைரசின் மாறுபாடு அடைந்த வைரஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இந்தியாவில் புதிய வகை கொரோனா! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

தீவிரக்காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி இவையே அதன்  அறிகுறிகள். இந்த வைரஸ் கொரோனோ போல அதிவேகமாக பரவக்கூடியது எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முகக்கவசம், சமூக இடைவெளி இவைகளை மீண்டும் கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். அத்துடன்  அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். வயதானவர்கள், இதற்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்வதும் மிகச் சரியே எனத் தெரிவித்துள்ளார்.

மா.சுப்பிரமணியன்
இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.  முகக்கவசம், சமூக  இடைவெளியை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் .கொசு உற்பத்தியை தடுக்க  தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வரை தமிழகத்தில் இந்த வைரஸ்  காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனை மேலும் கட்டுக்குள் வைக்கும் வகையில் மார்ச் 10ம் தேதி தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web