மக்களே கவனமா இருங்க!! புதிய வைரஸ் பரவலால் ஒரே நாளில் 9 பேர் பலி!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

 
மார்பர்க் வைரஸ்

கடந்த 2 ஆண்டுகளாக   கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் கோடிக்கணக்கானவார்கள் உயிரிழந்தனர். உலகமே ஸ்தம்பித்தது. உயிர் அச்சத்தால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.  

மார்பர்க் வைரஸ்

தற்போது தான் அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பிவரும் நிலையில் மீண்டும் எபோலோ போன்ற கொடிய வைரஸ் ஒன்று மத்திய ஆப்பிரிக்காவில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மார்பர்க் வைரஸ்
 இந்த வைரசின் பெயர்  மார்பர்க் .  ஆப்பிரிக்காவில்  இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்பர்க் என்னும் கொடிய வைரஸை கட்டுப்படுத்த மத்திய ஆப்பிரிக்கா நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அத்துடன் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும்  பரிசீலித்து வருகிறது.

 இந்த வைரசால் , தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் உடல்நலம் மோசமடைவது போன்ற பாதிப்புக்கள் தான் அறிகுறிகள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு 7 நாட்களில் கடுமையான ரத்த கசிவு அறிகுறிகளும் ஏற்படலாம். இது குறித்து  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதன்படி  தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  நோய் பாதித்த மாவட்டங்களில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அறிகுறிகள் இருப்பவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆப்பிரிக்காவுக்கு  500 சுகாதார பணியாளர்கள் பயன்படுத்த கூடிய பாதுகாப்பு உபகரணங்களை உலக சுகாதார அமைப்பு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web