மக்களே உஷார்!! அதிதீவிரமாக பரவும் புது வைரஸ் காய்ச்சல்!!

 
காய்ச்சல்

பங்குனிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்போதே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. பொதுவாக பருவநிலை மாறும்போது நோய்களின் தாக்கம் தீவிரமாகும். அந்த வகையில்  தமிழகத்தில் தற்போது மீண்டும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவிவரும் இந்த வைரஸ் காய்ச்சலால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மாநகராட்சி தீவிரம்! சளி, காய்ச்சல் உடையவர்கள் வீடு, வீடாக கணக்கெடுப்பு!

இந்த திடீர் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிதீவிரமாக பரவும் இந்த வைரஸ் காய்ச்சலால் தொடர்ந்து 4 நாட்களுக்கு அதீத காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல் சோர்வு  பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதே இந்தக் காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து  சுகாதாரத்துறை “ பருவகாலங்களில் வழக்கமாக பரவும் வைரஸ் தோற்று என்பதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் . காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதிகாலையில் அதிக அளவிலான பனிப்பொழிவு இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

காய்ச்சல்

இந்த காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டறிந்த போது வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும்.  பனி சீசன் முடியும் வரையில் குளிச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். காய்ச்சல், சளிக்கு மருத்துவர்களிடம்  உரிய பரிசோதனை செய்த பிறகே மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்ட பிறகும் காய்ச்சல் சரியாகவில்லை எனில் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web