மக்களே உஷார்!! தமிழகத்தில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு முதல் பலி!!

 
ஹெச்3என்2

இந்தியா முழுவதும் இன்புளூயன்சா பரவி வருவதாகவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தடுப்பு முறைகளை மேற்கொள்ளும் படியும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தது. தமிழகத்தில் இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழகத்தில் வைரஸ் பரவல் கிடையாது.இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் சமூக இடைவெளி , முகக்கவசம் அடிக்கடி கைகளை கழுவுதல் இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியிருந்தார். 

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்! பயன்படுத்திக்கோங்க மக்களே….!
தற்போது திருச்சியை பூர்வீகமாக கொண்டு பெங்களூருவில் பணிபுரிந்து வந்த  27 வயது இளைஞர்  ஒருவர் இன்புளூயன்சாவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் நண்பர்களுடன் மார்ச் 9ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பினார். அந்த இளைஞருக்கு திடீரென, மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் ஏற்பட்டது.  உடனடியாக உறவினர்கள் அவரை  தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு இன்புளுயன்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் பலி
உலகம் முழுவதுமே சமீப காலமாக இன்புளுயன்சா  பெரும்  அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் வைரஸ் காய்ச்சலை தடுக்க அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தபட்டன.  இருந்த போதிலும் இன்புளூயன்சாவால் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களை தான் அதிகம் தாக்கும் எனக்  கூறப்படுகிறது. இந்த இன்புளூயன்சா காய்ச்சலுக்கு கர்நாடகா, அரியானாவில் இதுவரை  2 பேர் உயிரிழந்துள்ளதாக மார்ச்  11ம் தேதி மத்திய அரசு தெரிவித்தது.  தற்போது திருச்சியில் உயிரிழந்த இளைஞருக்கு இன்புளூயன்சா வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545 பேருக்கு இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web