பொதுமக்களே உஷார்... 28 நாட்களில் 91000 பேருக்கு கொரோனா..!
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா வேரியண்ட் வேகமெடுத்து பரவத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றான இது இந்தியா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் பரவியுள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மே 28 வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. இதில் கேரளாவில் அதிக அளவில் பாதிப்புகள் இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் உலக அளவில் புதிய கொரோனா வேரியண்டால் 28 நாட்களில் 91,583 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
