மக்களே உஷார்.. இனி அபராதம்தான் ! காவல்துறை அதிரடி !!

 
ஹெல்மெட்

தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம். அதாவது பைக்கில் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இது கடைப்பிடிக்கப்படுவது இல்லை.

சென்னையில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது கடைப்பிடிக்கப்படுகிறது. இதேபோல் சில ஊர்களில் வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பல இடங்களில் ஹெல்மெட் விதிமுறை பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஹெல்மெட்

இந்நிலையில், தஞ்சையில் இனி ஹெல்மெட் அணியாவிட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, தஞ்சை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபாரதம் விதித்தனர்.

ஹெல்மெட்

அதே போல், லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு ரூ.5000ம், இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் சென்றால் ரூ.1000 அபராதமாக விதிக்கப்பட்டது‌. பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் இனி தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web