மக்களே ஜாக்கிரதை.. ஒன்றரை வருடங்கள் கழித்து கொரோனாவுக்கு ஒருவர் பலி! மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!

 
கொரோனா

மக்களே... ரொம்ப ஜாக்கிரதையாவும், பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்க. ஏறத்தாழ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்றினால், தமிழகத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், இன்று காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைப் போலவே ஜனநெரிசல் அதிகம் இருக்கும் திரையரங்குகள், கோயில்கள், சந்தை போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள் தவறாமல் முக  கவசத்தை அணிந்து செல்லுங்கள். கடந்த பிப்ரவரி முதல் இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 200க்கும் கீழ் இருந்து வந்த நிலையில், இந்தியாவில் தற்போது தினந்தோறும் 3,000 தாண்டி கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாவதாக பதிவாகி வருகிறது. 

Corona-virus

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 30 பேர் வீட்டு தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த 35 வயதுமிக்க பெண் ஒருவருக்கு மூளை கட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் காரைக்காலில் உள்ள ஜிப்மர் கிளை மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் புதுச்சேரி ஜிப்மருக்கு கடந்த ஒன்றாம் தேதி கொண்டு வரப்பட்டார். 

எந்த நோயாளி அனுமதிக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுக்கும் நடைமுறைப்படி அவருக்கு பரிசோதனை எடுத்ததில் 2ம் தேதி நோய் தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் காரைக்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு கொரோனா விதிமுறைகளின் படி இன்றே அடக்கம் செய்யப்பட்டது.

Corona

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி சுகாதாரத்துறையிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளேன், அந்த அறிக்கையின் பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web