மக்களே உஷார்... வெயிலின் கொடுமையால் தூய்மைப் பணியாளர் மயங்கி சரிந்து பலி!

 
மக்களே உஷார்...  வெயிலின் கொடுமையால் தூய்மைப் பணியாளர் மயங்கி சரிந்து பலி!  

தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், மதுரையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி மண்டலம் 1ல் ஒப்பந்த தூய்மை பணியாளராக நாராயணபுரத்தில் வசித்து வரும் 55 வயது  மணிவேல்  கடந்த 30 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று வழக்கம்போல வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்துவிட்டு மதுரை நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் பகுதியில் குப்பைகளை கொட்டச் சென்றிருந்தார்.  

வெயில்
கடும் வெயிலின் தாக்கம் காரணமாக மணிவேல் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார்.  கீழே கிடந்த கல் அவரது பின்னந்தலையில் தாக்கியதில் படுகாயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த சக தூய்மை பணியாளர்கள் மதுரை மாநகராட்சி மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?