இன்று முதல் தமிழகத்தில் 296 ரயில்களின் எண்கள் மாறியது... எந்தெந்த ரயில்கள்?! முழு விபரம்!
இன்று புது வருடத்தின் முதல் நாளில் நிறைய விஷயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி பழைய ரயில் எண்ணை வைத்துக் கொண்டு உங்கள் பயண திட்டத்தை வகுத்துக்கிட்டு இருக்காதீங்க. இன்று ஜனவரி 1ம் தேதி முதல் தென்னக ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களுக்கும், ரயில் எண்களை மாற்றம் செய்யப்போவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பயணிகள் ரயில்களுக்கும் புது எண்கள் வழங்கப்படும். பழைய எண்ணை வைத்துக் கொண்டு இந்த ரயில் வரவில்லையே என்று குழம்பாதீங்க.
சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தின் கீழ் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் பல்வேறு வழித்தடங்களில் 296 பயணிகள் ரயில்கள் இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலம் முதல் தற்போது வரை இந்த ரயில்கள், பூஜ்யத்தில் தொடங்கும் வண்டி எண்களுடன் கூடிய சிறப்பு ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஜனவரி 1ம் தேதியில் இருந்து 296 பயணிகள் ரயில்களும் புதிய எண்களில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06667-க்கு பதிலாக 56721 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06668-க்கு பதிலாக 56722 எனவும்,தூத்துக்குடியிலிருந்து வாஞ்சிமணியாச்சிக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06671-க்கு பதிலாக 56723, வண்டி எண் 06847-க்கு பதிலாக 56725 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது. வாஞ்சிமணியாச்சியிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06672-க்கு பதிலாக 56724, வண்டி எண் 06848-க்கு பதிலாக 56726 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.
வாஞ்சி மணியாச்சியிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06679-க்கு பதிலாக 56731 எனவும், திருநெல்வேலிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06409-க்கு பதிலாக பதிலாக 56003, வண்டி எண் 06673-க்கு பதிலாக 56728, வண்டி எண் 06675-க்கு பதிலாக 56729, வண்டி எண் 06677-க்கு பதிலாக 56733 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.
திருச்செந்துரில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06674-க்கு பதிலாக 56004, வண்டி எண் 06405-க்கு பதிலாக 56727, வண்டி எண் 06676-க்கு பதிலாக 56730, வண்டி எண் 06678-க்கு பதிலாக 56734, திருச்செந்துரிலிருந்து வாஞ்சிமணியாச்சிக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06671-க்கு பதிலாக 56723, வண்டி எண் 06680-க்கு பதிலாக 56732 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.
இதனால் தென்னக ரயில்வேயில் கட்டுப்பாட்டில் உள்ள 296 பயணிகள் ரயில்களின் வண்டி எண்களும் நாளை ஜனவரி1ம் தேதியில் இருந்து மாற்றம் செயயப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளிட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!