பொதுமக்களே உஷார்... கொளுத்தும் வெயிலில் ட்ரெண்டாகும் தர்ப்பூசணி பரோட்டா... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் மதுரை என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பன் பரோட்டா தான். இது தவிர சிக்கன் சிலோன் பரோட்டா, தேங்காய் கோதுமை பரோட்டா, வெஜ் செட் பரோட்டா என பல வகையான வெரைட்டி பரோட்டாக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அந்த பட்டியலில் ஒரு புது வகையான பரோட்டாவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுதான் 'தர்பூசணி பரோட்டா'. வெயில் கொளுத்தி வருவதால் மக்களை கவரும் வகையில் இந்த தர்ப்பூசணி பரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளனர் மதுரையில் ஹோட்டல்கள் உரிமையாளர்கள்.
முதன் முதலில் இந்த தர்பூசணி பரோட்டா மதுரையில் இருக்கும் விளக்குத்துண் பகுதியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு அது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது மதுரை மாவட்டம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. பரோட்டா மாவு தயார் செய்யும் போது அதனுடன் தர்பூசணி சாற்றையும் சேர்த்துக் கொள்கின்றனர். பரோட்டா மாவுடன் தர்பூசணி சாறு சேர்க்கும் போது அது ஒருவிதமான சுவையை கொடுக்கிறது. பிறகு மாவை எப்போதும் போல நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி பின் பரோட்டாவாக தட்டி, நெய் தடவி தவாவில் போட்டு சுட்டு விற்பனை செய்து விடுகின்றனர். சில ஹோட்டல்களில் தர்பூசணி வட்ட வடிவில் வெட்டி ஒரு துண்டை உள்ளே வைத்து பரோட்டாவாக சுட்டும் விற்பனை செய்கின்றனர். தர்பூசணியில் ஏற்கனவே இனிப்பு இருப்பதால் சிலர் வெறும் பரோட்டாவாக சாப்பிட்டு விடுகின்றனர். இது குறித்த வீடியோக்கள் சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது.
மதுரையில் டிரெண்டாகும் தர்பூசணி பரோட்டா குறித்த பல வீடியோக்கள் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த உணவு கலவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சாதாரணமாகவே பரோட்டா அவ்வளவு எளிதாக ஜீரணமாகாது. அதிக நேரம் எடுக்கும் . தர்பூசணி மிக எளிதில் ஜீரணமாகிவிடும். இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால் செரிமான அமைப்பில் பிரச்சனை வரலாம். கூடுதலாக குடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என உணவுத்துறை எச்சரித்துள்ளது. சில சமயங்களில் தவறான உணவு சேர்க்கையால் அது மக்களின் உயிருக்கு உலை வைக்கும். ட்ரெண்டு தானே என்று அலட்சியமாக இருக்காமல், ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று சாப்பிடுவதற்கு முன் ஒன்றுக்கு பல முறை யோசித்து செய்ய வேண்டும் என உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!