மக்கள் கொண்டாட்டம்... இந்த வாரமும் 3 நாட்கள் தொடர் விடுமுறை!
Apr 16, 2025, 09:05 IST

தமிழகத்தில் கடந்த வாரத்தில் ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி, அடுத்து பங்குனி உத்திரம், அதற்கடுத்தபடியாக சனி ஞாயிறு வார விடுமுறை என தொடர்ச்சியாக விடுமுறை தினங்களாக அமைந்ததில் பலரும் சொந்த ஊர் நோக்கி படையெடுத்தனர். சுற்றுலா தலங்களும் நிரம்பி வழிந்தது.
அதன் பின்னர் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து திங்கட்கிழமையும் விடுமுறை என்பதால் மக்கள் மகிழ்ந்தனர்.
இந்நிலையில் மீண்டும் இந்த வாரமும் வரும் வெள்ளிக்கிழமை முதல் சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினங்களாக அமைந்துள்ளன.
ஏப்ரல் 18ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. அதே போன்று வார விடுமுறையாக சனி ஞாயிறு பொது விடுமுறை தினங்கள் என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை தினங்களாக உள்ளன. ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், பலரும் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web