வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் நிலம் வாங்க தடை... புதிய சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

 
பத்திரப்பதிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்  அம்மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி உள்ளார். இம்மாநிலத்தில் பாஜக அரசு பல்வேறு அதிரடி சட்டங்களை செயல்படுத்தி  வருகிறது. அந்த வகையில், பாஜக ஆளும் உத்தரகாண்ட்டில் இந்தியாவிலேயே முதன் முறையாக  பொது சிவில் சட்டம்  ஜனவரி 27ம் தேதி அமலுக்கு வந்தது.

இச்சட்டத்தின்படி, திருமணம், விவாகரத்து, லிவ்-இன் உறவு, உறவு முறிவு இவைகளை உடனுக்குடன்  அரசிடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஒரு மாதத்துக்குள் அரசிடம் பதிவு செய்யத் தவறினாலோ அல்லது தவறான தகவல்களை வழங்கினாலோ சிறைத்தண்டனை  அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன்  உத்தரகாண்ட்டில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க தடை விதிக்கும் புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

உத்தரகாண்ட் மக்கள் மாநிலத்தில் நிலம் வாங்கும் தனிநபர்களுக்கு வரம்புகள் விதிக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் மாநிலத்தில் புதிய நிலச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான த திட்டத்தை முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்தார். இதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் விவசாய மற்றும் தோட்ட நிலங்களை வெளிமாநிலத்தவர் வாங்க தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை நடப்பு நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் இதனை சட்டமாக்கவும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
உத்திரகண்ட்
இது குறித்து முதல்வர் தாமி எக்ஸ் தளப் பக்கத்தில், “மாநில மக்களின் நீண்டகால கோரிக்கையையும் அவர்களின் உணர்வுகளையும் முழுமையாக மதித்து, இன்று அமைச்சரவை கடுமையான நிலச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மாநிலத்தின் வளங்கள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, மாநிலத்தின் அசல் அடையாளத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், “எங்கள் அரசாங்கம் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முழுமையாக உறுதியாக உள்ளது, அவர்களின் நம்பிக்கையை ஒரு போதும் உடைக்க விடமாட்டோம். இந்த முடிவு, நமது மாநிலத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்பதை தெளிவுபடுத்துகிறது. நிச்சயமாக, இந்த சட்டம் மாநிலத்தின் அசல் வடிவத்தைப் பராமரிப்பதிலும் உதவியாக இருக்கும்" என  தெரிவித்துள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?