கூகுள் பே, போன் பே வைத்திருப்பவர்களே உஷார்... ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள்!
இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் புழக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் பெரும்பாலும் கூகுள் பே, போன்பே மூலம் பணப்பரிவர்த்தனைகள் தான். ஒருவர் பயன்படுத்தும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்ஃபோன் எண் ஏதேனும் ஒரு காரணத்தால் செயல்படாமல் போயிருந்தால், அந்த வங்கிக் கணக்கோ அல்லது அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் பே, போன் பே-வின் யுபிஐ ஐடிகளோ முடக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பணப்பரிமாற்ற கார்ப்பரேஷன் இந்தியா எனப்படும் என்பிசிஐ புதிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. இந்தப் புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த விதிமுறயைல், ஒருவர் வங்கிக் கணக்குத் தொடங்கும் போது கொடுத்த செல்போன் எண்ணை தற்போது அவர் பயன்படுத்தாமல் இருந்தால், அந்த வங்கிக் கணக்கே முடக்கப்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர்க்க ஒரே ஒரு வழிதான். அனைவரும், தங்களது வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்கள் என்ன என்பதை உறுதி செய்து கொண்டு, அது பழைய எண்ணாக இருந்தால், உடனடியாக வங்கிக்குச் சென்று பழைய எண்ணை மாற்றிவிட்டு தற்போது பயன்படுத்தும் புதிய எண்ணைக் கொடுத்துவிட்டால் போதும், உங்கள் வங்கிக் கணக்கு பாதுகாப்பாக செயல்படும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
