அடுத்த 5 நாட்களுக்கு 12 மாவட்ட மக்களே உஷார்!!

 
மழை

தமிழகத்தில் வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம்,  புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது நாளை மறுநாள்  பிப்ரவரி 1ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.  

மழை

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நேற்று ஜனவரி 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. நாளை மாலை வரை அதே பகுதியில் நிலைகொண்டு  மேற்கு-வடமேற்கு திசையிலும்,  அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 01.02.2023 அன்று  காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்கக் கூடும். இதன் காரணமாக, இன்று ஜனவரி 30ம் தேதி தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை   பெய்யக்கூடும்.நாளை ஜனவரி 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்   இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமானது வரை  மழை   பெய்யக்கூடும்.


நாளை மறுநாள் புதன்கிழமை  தென்தமிழக மாவட்டங்கள், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.பிப்ரவரி 2ம் தேதி வியாழக்கிழமை தென்தமிழக மாவட்டங்களில் அநேக  இடங்களிலும்,  வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.பிப்ரவரி 3ம் தேதி தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசான மழை   பெய்யக்கூடும்.

மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web