அச்சத்தில் கோவை மக்கள்... கொரோனா பாதிப்புக்கு ஒரே வாரத்தில் 3 பேர் பலி !

 
கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக கடந்த வாரத்தில் 100-க்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது, 300-க்கைக் கடந்துள்ளது. தமிழகம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதேநேரத்தில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குழந்தை, இளம்பெண்கள், முதியவர்கள் என அடுத்தடுத்து தமிழகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் கொரோனா உயிரிழப்பு பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள், அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதேபோல கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே ஒருவரும் கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்திருந்தார்.

கொரோனா

அந்த வகையில் கோவை அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது கோவை மக்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் கொடுத்துள்ளது. இதனால் சுகாதார கண்காணிப்பு மற்றும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web