பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் !! 2 வது நாளாக சரவணா ஸ்டோரிலிருந்து கரும்புகை!!

 
சரவணா ஸ்டோர்ஸ்

மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்  10 மாடி கொண்ட சரவணா ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டது. நேற்று இங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  கடையின் 9வது தளத்தில்  உணவகத்தில் இருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் கடை ஊழியர்களும், கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பொதுமக்களும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.  அப்போது வெளியேறிய கரும்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சரவணா ஸ்டோர்ஸ்

இதனால் மாட்டுத்தாவணி பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் 2வது நாளாக இன்று காலை  மீண்டும் கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை தண்ணீரை பீய்ச்சி அடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது. தொடர்ந்து 2 வது நாளாக கரும்புகை வெளியேறியதால் சுற்று வட்டார மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சரவணா ஸ்டோர்ஸ்

இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள், மாநகராட்சி தண்ணீர் லாரி வரவழைக்கப்பட்டு கரும்புகை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web