அதிகாலையில் அலறிய மக்கள்... ஆந்திராவில் திடீர் நிலநடுக்கம்... ரிக்டர் 3.5 ஆகப் பதிவு!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தத் திடீர் நில அதிர்வால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, ஆந்திராவின் பால்நாடு (Palnadu) பகுதியில் இன்று (பிப்ரவரி 19, 2026) அதிகாலை சுமார் 2:33 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலைகொண்டிருந்தது. இதன் அமைவிடம் 16.19 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.62 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருந்ததாக முதற்கட்ட ஆய்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\

நள்ளிரவில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட இந்த நில அதிர்வு சில வினாடிகள் நீடித்தது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான கட்டிடச் சேதங்களோ, உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் பாதிப்புகள் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆந்திராவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் மக்களிடையே சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
