பெரும் சோகம்... கடும் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்கள்!

 
நிலச்சரிவு
 

 

உத்தரகண்ட் மாநிலத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக  பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கேதார்நாத் தாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், யாத்ரீகர்கள் 40 பேர் சிக்கி கொண்டனர். 

கேரள நிலச்சரிவு

இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர்  சம்பவ இடத்திற்கு  விரைந்தனர்.  இதையடுத்து, சிக்கித் தவித்த, பக்தர்கள் 40 பேரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். பல பகுதிகளில், சாலை துண்டிக்கப்பட்டு இருப்பதால்  மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

உத்தரகண்ட் நிலச்சரிவு

அக்ரகால், சம்பா, ஜாகிந்தர் மற்றும் துக்மந்தர்  பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.  பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. டேராடூன், தெஹ்ரி, நைனிடால் மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது