நான் தான் இயேசு.. அதிர வைத்த 'வாழும் இயேசு'!

 
எலியுட் சிமியு

கென்யாவின் புங்காமோ மாகாணத்தில் டோங்கரேன் பகுதியைச் சேர்ந்தவர் எலியுட் சிமியு. இவர் தன்னைத் தானே வாழும் இயேசு எனக் கூறி வந்துள்ளார். 
சரி இவரது பின்னணியை சிறிது பார்ப்போம். எலியுட் சிமியு தனது 20 வயதில் திருமணம் செய்துள்ளார். அவருக்கு 8 குழந்தைகள். கடந்த 2009ஆம் ஆண்டு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, உறவினர்கள் தாக்கியதில் சிமியுவின் தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளார்.

இதனையடுத்தே எலியுட் சிமியு, தன்னை வாழும் இயேசு எனக் கூறிக் கொண்டு மத பிரச்சாரமும் செய்து வருகிறார். தனது பெயரையும் டோங்கரேன் வா இயேசு என மாற்றிக் கொண்டார். இதற்கெல்லாம் மேலாக அவரை நம்பி ஒரு கூட்டமும் பின்னால் செல்கிறது. 

எலியுட் சிமியு

இதில் பலரும் முன்னதாக அவரை தாக்கிய குடும்பத்தினர் தான். வாழும் ஏசுவாகிய தனது கணவர் தண்ணீரை தேனீராக மாற்றியதாகவும், அதைக் கிராம மக்கள் அனைவரும் குடித்தனர் என்றும் வாழும் இயேசுவின் அற்புதத்திற்கு சாட்சி அவரது மனைவி சிமியுவின் மனைவி ஊர் ஊராக சென்று சாட்சி கூறியிருக்கியார்.
நாளுக்கு நாள் புதிய யோசுவின் பிரச்சாரம் அதிகமானதால், ஆத்திரமடைந்த ஒருவர் உண்மையில் வாழும் இயேசு என்றால் சிலுவையில் மறித்து மூன்றாம் நாள் உயிருடன் வந்து நிரூபியுங்கள் நாங்கள் நம்புகிறோம் என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டார். இந்த தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் இதே முழக்கத்தை முன்வைத்தனர்.

அவர் செல்லும் இடமெல்லாம் இதே கேள்விதான் அவர் முன்பு வைக்கப்பட்டது. சிலர் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டனர். அங்கெல்லாம், சிமியுவோ, தன்னை சிலுவையில் அறையக்  கூடாது. அப்படி செய்தால் அது உலகிற்குத்தான் பிரச்சனை. மக்களுக்குத்தான் பிரச்சனை, மக்களை காக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று வாதம் வைத்து உள்ளார். 

ஆனால் மக்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், ஒரு கட்டத்தில் உண்டையில் சிலுவையில் அறைந்துவிடுவார்களோ எனஅச்சமடைந்த சிமியு  காவல்துறையிடம் தஞ்சமடைந்துள்ளார். 

எலியுட் சிமியு

மக்கள் தன்னை சிலுவையில் அறைந்து கொல்ல துடிக்கிறார்கள் என்றும், எனவே தன் உயிரை பாதுகாக்க வேண்டும் என்றும் சிமியு காவல்துறையிடம் முறையிட்டிருக்கிறார். தற்போது அவருக்கு பாதுகாப்பு அளித்தாலும் அவரை கைது செய்யவில்லை. இதனால் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் வாழும்  கிறிஸ்தவர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!