2023ம் ஆண்டுக்கான தந்தை பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு...!

 
சுப வீ

  தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை சிறப்பித்து வருகிறது.  அந்தவகையில், 2023-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது”-க்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.   கல்லூரியில் பணியாற்றும் பொழுதே தமிழ் தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர்.

சுப வீ

அத்துடன்  பெரியாரின் கொள்கைகளான சமூக நீதி, சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவு முதலான கருத்துகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டு வருபவர்களை  ஊக்குவிக்கும் வகையில்  “டாக்டர் அம்பேத்கர் விருது”-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி   பி.சண்முகத்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

சண்முகம்

விருது பெறுபவர்களுக்கு   விருதுத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாயுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும். பி.சண்முகம், தமிழகத்தில் 32 ஆண்டு காலமாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக   மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளார்.  தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி நீதி கிடைக்க வகை செய்துள்ளார்.   

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web