ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு தவெக கேட்ட இடத்திற்கு அனுமதி மறுப்பு - மாற்று இடம் தேட அறிவுறுத்தல்!

 
தவெக

ஈரோட்டில் வரும் டிசம்பர் 16ம் தேதி நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், பவளத்தாம்பாளையத்தில் அக்கட்சியினர் பொதுக்கூட்டத்திற்காகக் கேட்டிருந்த இடத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

தவெக

ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் உள்ள பெருந்துறை சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஒரு இடத்தை, பொதுக்கூட்டம் நடத்துவதற்காகத் த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் இன்று காலை தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அந்தத் தனியார் இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில், அந்த இடத்தில் போதிய அளவு வசதிகள் இல்லாததால் அனுமதி வழங்க இயலாது எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தவெக விஜய்

இதனையடுத்து, 30 ஆயிரம் பேர் பங்கேற்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தால், த.வெ.க.வினர் தற்போது பெருந்துறை அடுத்த சரளை என்ற இடத்தில் மாற்று இடம் தேர்வு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!