அனுமதி இலவசம்... இன்று முதல் சென்னையில் புத்தக திருவிழா.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் !
இன்று மாலை, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பபாசியின் 49-வது சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளையும் வழங்குகிறார். இந்த முறை பொதுமக்களிடம் நுழைவு கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும், அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜன.8 முதல் ஜன.21 வரை நடைபெறும் இந்த புத்தகக் காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் 428 தமிழ் அரங்குகள், 256 ஆங்கில அரங்குகள் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
புத்தகக் காட்சியில் ஏடிஎம், கார்டு ஸ்வைப்பிங், இலவச வைஃபை, சார்ஜிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் துறை, ஆதார் சேவைகள், சோலார் மின்சாரம் குறித்த அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. ஜன.12-ம் தேதி 3 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
