8,525 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையில் வாங்க அனுமதி ... !

 
தமிழக மின்சார வாரியம்


 
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மின்சார பயன்பாட்டின் தேவை  அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் மாநிலத்தின் மின்சார பயன்பாடு அதிகரித்து உச்ச அளவை எட்டும். இதை ஈடு செய்ய வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப்படும். இந்தாண்டு கோடை காலத்தில் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 22,000 மெகாவாட்டுக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கிறது.

மின்சாரம்

இதை ஈடு செய்ய குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கலாம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 வரை மின் தேவையை சமாளிக்க 2750  மெகாவாட் மின்சாரமும், பீக் ஹவர்ஸ் என அழைக்கப்படும் மாலை 6 மணி இரவு 12 மணி வரை 5775 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது.

மின்சாரம்

இதன்படி, இந்த மின்சாரத்தை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மனு தாக்கல் செய்து இருந்தது.  இது குறித்து பரிசீலணை செய்து வந்த ஆணையம்  இந்த மின்சாரத்தை கொள்முதல் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?