ஆர்சிபியிலிருந்து பெர்ரி விலகல்… அதிர்ந்த ரசிகர்கள்!
மகளிர் பிரீமியர் லீக் (WPL) நான்காவது சீசன் 2026 ஜனவரி 9-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி, தனிப்பட்ட காரணங்களால் இந்த சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ஆர்சிபி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
WPL 2026 தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள ஆர்சிபி தயாராகி வந்த நிலையில், பெர்ரியின் விலகல் அணியின் திட்டங்களை மாற்றியமைக்க வைத்துள்ளது. தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே வெளியான இந்த தகவல், போட்டியின் மீது இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அணியின் முக்கிய தூணாக இருந்த பெர்ரியின் அனுபவம் இல்லாதது ஆர்சிபிக்கு பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. அவருக்கு மாற்றாக யார் அணியில் சேர்வார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
