விபரீதம்... ரயில் தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் கல்லூரி மாணவர்கள்!

 
வீடியோ எடுக்கும் கல்லூரி மாணவர்கள்


ஈரோடு -  சேலம் ரயில் வழிதடத்தில் பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவர்கள் நின்றுக் கொண்டு ஆபத்தை உணராமல் தங்களது செல்போன்களில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வருவது அந்த பகுதி மக்களிடையே பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. தினந்தோறும் மாணவர்களின் இந்த செயல் அந்த பகுதிகளில் தொடர்கதையாகி வரும் நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இது குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

உலகம் முழுவதுமே ரயில் நிலையங்கள், பனிப் பாறைகள், அருவிகள், நீர் வீழ்ச்சிகள், ஓடும் ரயில்கள், தண்டவாளங்களில் என தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பலரும் செல்ஃபி வீடியோக்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் எடுத்து வருகின்றனர். 

ரயில் தண்டவாளம்

ரயில்கள் வரும்போதும், தண்டவாளங்களில் நின்றுக் கொண்டும் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், ஜங்ஷன் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிராமப்புற பகுதிகளில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு - சேலம் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள பள்ளிபாளையம் பகுதியில், கீழ்காலனி பயணியர் மாளிகை, காவிரி பாலம் ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தண்டவாளத்தில் நின்றுக் கொண்டு  ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவு செய்வதும், செல்ஃபி புகைப்படங்களை எடுப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

ரயில் தண்டவாளம்

இந்நிலையில் நேற்று ஒரு மாணவர் தண்டவாளத்தில் அமர்ந்து போனில் மெய்மறந்து பேசிக்கொண்டு இருந்தார். இந்த ரீல்ஸ் வீடியோவை ஒருவர் வளைதளத்தில் வைரலாக்கியுள்ளார். இந்நிலையில், மாலை வேளைகளில் ரயில்வே போலீசார், இந்த பகுதியை கண்காணித்து அத்து மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது