தேர்தல் முடிவை எதிர்த்த மனு… ஜன சுராஜ் கட்சிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி பதில்!
பீகாரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.–ஜே.டி.யூ கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன சுராஜ் கட்சியும் போட்டியிட்டது. ஆனால் அந்த கட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஜன சுராஜ் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய மாநில அரசின் முடிவு நடத்தை விதிகளை மீறியது என்றும், வாக்காளர்களை பாதிக்கும் வகையில் நலத்திட்டம் பயன்படுத்தப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பீகாரில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் மாநிலத்தை சார்ந்தது என்பதால் பாட்னா உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையின்பேரில் முழு மாநிலத்திற்கும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், மக்கள் நிராகரித்த நிலையில் நீதித்துறையை விளம்பர மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
