சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு?... 10 பேரை தட்டித் தூக்கிய காவல்துறை!

 
சீமான்
 

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு இருக்கும் பகுதியில் எப்போதும்  போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், பெரியார் பற்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையான நிலையில்  சீமானின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு

 அவர்கள் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட்டு  போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக  தகவல்கள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சீமான்

அப்போது ராயப்பேட்டை பகுதியில் வைத்து சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு திட்டமிட்ட 10 பேர் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து சீமான் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?