காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

 
பரத்ராஜ்

தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் காவல் நிலையம் மீது பிப்ரவரி 3ம் தேதி  இரவு இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மாவட்டம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

ராணிப்பேட்டை

இந்த வழக்கில் 5 பேர் குற்றம் சாட்டப்பட்டு  இவர்களில் முக்கிய நபரான சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழரசன் (38), பரத்ராஜ் (19), விஷால் (19) மற்றும் திலீபன் (27) ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பெட்ரோல் குண்டு

இவர்களை சிறையில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பரிந்துரை செய்துள்ளார்.  அவரது பரிந்துரையின் பேரில் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web