சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு: புத்தாண்டு தினத்தில் வணிகர்களுக்குப் பேரதிர்ச்சி!
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து சிலிண்டர் விலையை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1), வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை இன்று ரூ. 110.00 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றைய விலை சுமார் ₹1,739.50-லிருந்து உயர்ந்து, இன்று ₹1,849.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இல்லத்தரசிகளுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் அதன் விலை ₹868.50 என்ற நிலையிலேயே நீடிக்கிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சிலிண்டர் விலை குறைந்திருந்த நிலையில், புத்தாண்டின் தொடக்கத்திலேயே இந்த உயர்வு உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
