தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை... பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர்!

 
பெட்ரோல் பெட்ரோல்

தமிழ்நாட்டில் ல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற வதந்தி பரவி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து பெட்ரோல் நிலையங்களுக்கு அதிகமாக சென்று வருவதாக கூறப்படுகிறது.

E20 பெட்ரோல்

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் எண்ணெய் நிறுவனங்கள் தேவையான அளவில் பெட்ரோல், டீசலை விநியோகித்து வருவதாக தெரிவித்தார். சென்னை முதல் குமரி வரை எந்த பெட்ரோல் நிலையத்திலும் எரிபொருள் கிடைக்கும் என்றும், வாகனங்களில் நிரப்பிக்கொள்ள மட்டுமே போதும் என்றும் அவர் கூறினார்.

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு

மேலும் கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 7 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களில் 21 நாட்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தால் அதிகமாக வாங்கி செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!