அமெரிக்கா முதல் வியட்நாம் வரை 95 நாடுகளில் பெட்ரோல் விலை கடும் உயர்வு!

 
பெட்ரோல் பெட்ரோல்

ஈரான் மற்றும் அமெரிக்கக் கூட்டுப்படைகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகெங்கிலும் உள்ள 95 நாடுகளில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே பெட்ரோல் விலை இருபது சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் ஒரு கேலன் எரிபொருள் ஐந்து டாலரைத் தாண்டியுள்ளது. கம்போடியாவில் அதிகபட்சமாக அறுபத்தெட்டு சதவீதமும், வியட்நாமில் ஐம்பது சதவீதமும் விலை உயர்ந்துள்ளதால், அந்த நாட்டு மக்கள் அன்றாடத் தேவைகளுக்காகப் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வளைகுடாப் பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் இறக்குமதி செய்யும் ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற ஆசிய நாடுகள் இந்த விலையேற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தென்கொரியா தனது முப்பது ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு உச்ச வரம்பு விலையை நிர்ணயம் செய்து அவசர கால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் எரிபொருள் சேமிப்பு குறைந்ததால் அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்கப் பல்கலைக்கழகங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

இந்தச் சர்வதேசப் நெருக்கடி குறித்து ஆலோசிக்க ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். பிரான்ஸ் அதிபர் மேக்ரான், தங்களின் அவசர காலச் சேமிப்பில் உள்ள எரிபொருளைப் பயன்படுத்திக் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். பெட்ரோல் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதோடு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உலகம் முழுவதும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் இன்னும் பல நாடுகளில் இந்த விலையேற்றம் அமலுக்கு வரும் என்பதால், சர்வதேசப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!