ஆகஸ்ட் 3ம் தேதி முதுகலை நீட்தேர்வு.. உச்சநீதிமன்றம் உத்தரவு. !
ஜூன் 15ம் தேதி முதுகலைப் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 2,42,678 பேர் முதுநிலை நீட் தேர்வை எழுத இருந்த நிலையில், தேர்வு 2 ஷிப்டுகளாக நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் கூறிவிட்டது. இதனை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

வழக்கு விசாரணையில் மருத்துவ வாரியம் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது என்றும், ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து ஜூன் 15ம் தேதி 2 ஷிப்டுகளாக நடத்தப்பட இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது , 2.20 லட்சம் மாணவர்கள் முதுநிலை நீட் தேர்வெழுதும் நிலையில் ஒரே ஷிப்ட் ஆக தேர்வு நடத்தினால், 450 கூடுதல் மையங்கள் தேவைப்படும் என தேசிய தேர்வு முகமை வாதத்தை முன்வைத்தது. தேர்வு மையங்களை கண்டறிந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடுதல் அவகாசம் தேவை என தேர்வு வாரியம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நீட் முதுநிலைத் தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்தலாம என தீர்ப்பளித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
