பிலிப்பைன்ஸ் பெண் மேயர் ஆலிஸ் குவோவிற்கு ஆயுள் தண்டனை!
பிலிப்பைன்சின் வடக்கு பிராந்தியமான பம்பன் நகரின் முன்னாள் மேயர் ஆலிஸ் குவோ (வயது 35), சீனாவைச் சேர்ந்தவர், சட்டவிரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையை பெற்று மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம், சீனாவுக்கு சொந்தமான ஒரு சூதாட்ட நிறுவனத்தின் தலைவராகவும் இருந்த இவர், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் 700-க்கும் மேற்பட்ட பேரை மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், “சீனாவுக்கு உளவு பார்த்தவர்” என்ற குற்றச்சாட்டில் ஆலிஸ் குவோ உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். விசாரணை நிறைவடைந்த பின்னர், அவருக்கு மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது.
இதன்படி, பம்பன் கோர்ட்டு ஆலிஸ் குவோ மற்றும் அவருடன் தொடர்பு கொண்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
