மெஸ்ஸியுடன் ஒரு புகைப்படம் எடுக்க ரூ10 லட்சம் கட்டணம் நிர்ணயம்!
இந்தியாவுக்கு வருகிற லியோனல் மெஸ்ஸியை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13 முதல் 15 வரை மெஸ்ஸி இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், தில்லி நகரங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு முன்னோடிகள் உள்ளிட்ட பலரும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஹைதராபாத் ஃபலக்னுமா அரண்மனையில் நடைபெறும் பிரத்யேக நிகழ்ச்சியில் மெஸ்ஸியுடன் நேரடியாக உரையாடி, அவருடன் புகைப்படம் எடுக்க வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. ஆனால், அதற்கான கட்டணம் ரூ.9.95 லட்சம் + ஜிஎஸ்டி என மொத்தம் ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ‘பிரீமியம்’ சந்திப்பு வாய்ப்பு வெறும் 100 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மெஸ்ஸியை நேசிக்கும் இந்திய ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
