வைரலாகும் போட்டோஸ்... ஆபரேஷன் சிந்தூர் இலச்சினையை வடிவமைத்த 2 ராணுவ வீரர்கள் !
இந்தியாவில் ஜம்முகாஷ்மீர் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. தற்போது இந்த இலச்சினை வடிவமைப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி மே 6ம் தேதி நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூருக்கான இலச்சினை வடிவமைப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் இலச்சினையை லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவ் சுரிந்தர் சிங் ஆகியோர் வடிவமைத்தனர் என இந்திய ராணுவ சிறப்பிதழில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அவர்கள் இலச்சினையுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிந்தூரில் உள்ள இரண்டாவது 'ஓ' ஒரு பாரம்பரிய குங்குமப்பூ கிண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. திருமணமான இந்து பெண்களின் புனித சின்னம் - அதன் அடர் சிவப்பு நிறம் தியாகம், நீதி மற்றும் தேசிய பெருமை பற்றி நிறைய பேசுகிறது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனை, அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்ற வீடியோ நேரலையை, வெள்ளை மாளிகையில் உள்ள தனது அறையில் இருந்து அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பார்வையிட்டார்.
அதுபோல் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை, 'வார் ரூமில்' இருந்தபடி இந்திய தளபதிகள் பார்வையிட்டனர். இந்த படத்தை ராணுவம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
