வைரலாகும் புகைப்படங்கள்... 2,500 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D யில்!

தமிழ்நாட்டில் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் கி.மு 6 ம் நூற்றாண்டில் பழமையான நாகரிகங்களில் ஒன்று இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கார்பன் டேட்டா உறுதிப்படுத்தியுள்ளனர்.
மதுரையில் இருந்து 12 கி.மீ தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடி பகுதியில் வாழ்ந்த இருவரின் முகங்களை 3D செயல்முறையில் இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வகம் 3 டி முறையில் தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்துள்ளது. கொந்தகையில் கிடைத்த இரு மண்டை ஓடுகளை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், இந்த முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 80% அறிவியல், 20% கலையை பயன்படுத்தி இவை வடிவமைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வு குறித்து இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஃபேஸ் லேப்பின் இயக்குனர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன் “முக தசை அமைப்பை மீண்டும் உருவாக்கவும், உடற்கூறியல் மற்றும் மானுடவியல் தரநிலைகளைப் பின்பற்றி முக அம்சங்களை மதிப்பிடவும் கணினி உதவியுடன் கூடிய 3D முக மறுசீரமைப்பு முறையைப் பயன்படுத்தினோம்” என விளக்கம் அளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அகழ்வாராய்ச்சி இடத்திலிருந்து 800 மீ தொலைவில் உள்ள கொண்டகை என்ற புதைகுழியில் இந்த மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. மரபியல் அடிப்படையில் வம்சாவளியைக் கண்டறிய மேலும் டிஎன்ஏ ஆய்வுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!