பயிற்சி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சீரழித்த பிசியோதெரபிஸ்ட்... சென்னையில் கொடூரம்!

 
பலாத்காரம்

சென்னையில் மருத்துவப் படிப்பு முடித்து இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு வந்த மாணவிக்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்த பிசியோதெரபிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அந்தப் பெண், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி நான்காம் ஆண்டு படித்து வருகிறார். தனது பயிற்சிக்காகப் பெரம்பூரில் உள்ள ஒரு புனர்வாழ்வு மையத்தில் கடந்த 17-ஆம் தேதி தான் அவர் பணியில் சேர்ந்துள்ளார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

நேற்று காலை அந்த மருத்துவமனையின் உரிமையாளரான பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன், மாணவிக்குத் தொலைபேசி வாயிலாக ஒரு நோயாளிக்கு அவசரமாகச் சிகிச்சை அளிக்க வேண்டும் என அழைத்துள்ளார். அதன்பேரில் அங்குச் சென்ற மாணவியைக் கார்த்திகேயன் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற அவர், இறுதியாகக் கொளத்தூர் ஜெயந்தி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு மசாஜ் சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். அங்கே மாணவியிடம் குடிக்க ஏதேனும் வேண்டுமா எனக் கேட்டுள்ளார். தனக்கு டீ, காபி பழக்கம் இல்லை என மாணவி கூறவே, தனது காரில் இருந்த குளிர்பானத்தை அவருக்குக் கொடுத்துள்ளார்.

அந்தக் குளிர்பானத்தைக் குடித்த சில நிமிடங்களிலேயே மாணவிக்குத் தலைசுற்றலும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது, கார்த்திகேயன் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கிருந்து தப்பித்துச் சென்ற மாணவி, பயத்தில் முதலில் வீட்டில் சொல்லாமல் தனது அக்காவிடம் அழுது கொண்டே நடந்ததைக் கூறியுள்ளார். பின்னர் உறவினர்களுடன் சென்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, கார்த்திகேயனின் தரப்பில் இருந்து முறையான பதில் வரவில்லை.

பாலியல்

பாதிக்கப்பட்ட மாணவி கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிஎன்எஸ் (BNS) பிரிவுகளான 123 (தீங்கு விளைவிக்கும் பொருளைக் கொடுத்தல்), 63 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 64 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இன்று காலை கார்த்திகேயனைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்படும் தீவிர விசாரணையில், இதுபோன்று வேறு ஏதேனும் மாணவிகளிடம் அவர் கைவரிசை காட்டியுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வந்த ஒரு மாணவிக்கு, அந்தத் துறையைச் சேர்ந்த ஒருவராலேயே இத்தகைய கொடுமை நேர்ந்திருப்பது சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!